Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜப்பான் நிறுவனத்தின் அகழாய்வு இயந்திரங்கள் அறிமுகம்

ஜப்பான் நிறுவனத்தின் அகழாய்வு இயந்திரங்கள் அறிமுகம்
கோபெல்கோ அறிமுகப்படுத்திய 3 புதிய அகழாய்வு இயந்திரங்களுடன் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜுன் ஹயாமா, இயக்குநர் மோசஸ் எடி.

இதில் மேம்படுத்தப்பட்ட அகழ்வுத் திறன், ஜியோஸ்கேன் தொலைநிலைக் கண்காணிப்பு, குளிரூட்டும் வசதி, எல்இடி பணிவிளக்குகள் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

பகிரவும் WhatsApp Facebook

இந்திய உட்கட்டமைப்புத் துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஜப்பானைச் சேர்ந்த கோபெல்கோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா நிறுவனம் 19.1 முதல் 24 டன் எடைப் பிரிவில் 3 புதிய அகழாய்வு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இந்த புதிய இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எஸ்கே210, எஸ்கே215எல்சி, எஸ்கே230எக்ஸ்டிஎல்சி ஆகிய 3 புதிய இயந்திரங்களும் 150 குதிரைத்திறன் கொண்ட கம்மின்ஸ் சிஆர்டிஐ இயந்திரத்தில் இயங்குகின்றன. இதில் மேம்படுத்தப்பட்ட அகழ்வுத் திறன், ஜியோஸ்கேன் தொலைநிலைக் கண்காணிப்பு, குளிரூட்டும் வசதி மற்றும் எல்இடி பணிவிளக்குகள் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஹைட்ராலிக் ஆயில் மற்றும் பில்டர்களை பராமரிக்கும் இடைவெளி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயந்திரங்கள் செயல்படாமல் நிற்கும் நேரமும், பராமரிப்புச் செலவுகளும் பெருமளவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோபெல்கோ நிறுவன நிர்வாக இயக்குநர் ஜுன் ஹயாமா பேசுகையில், "இந்தியாவின் ஆசிய வளர்ச்சித் திட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் முழு உறுதியுடன் இருக்கிறது" என்றார்.

2006-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் அகழாய்வு இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட இயந்திரங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், 16-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

முந்தைய செய்தி
மறுகட்டுமானத்தில் புதிதாக 12,648 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ராஜகுமார்
அடுத்த செய்தி
வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது: SBI

தொடர்புடைய செய்திகள்